Rock Fort Times
Online News

துப்பு துலக்க மாநகர காவல் துறையில் புதிய மோப்பநாய் சேர்ப்பு

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக எம். சத்திய பிரியா ஐ.பி.எஸ். பொறுப்பேற்றது முதல், சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுத்து வருவதோடு துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்களுக்கு உரிய அறிவுரையும் வழங்கி வருகிறார். இந்த நிலையில் குற்ற சம்பவங்களில் துப்பு துலக்குவதற்காக திருச்சி மாநகர காவல் துறைக்கு புதிதாக மோப்பநாய் வாங்கப்பட்டு அதற்கு காவேரி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மோப்ப நாய்க்கு சென்னை பரங்கி மலையில் உள்ள பயிற்சி மையத்தில் கடந்த 6 மாதங்களாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு இன்று ( 02.06.2023 ) முதல் திருச்சி மாநகர மோப்ப நாய் படை பிரிவில் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்