Rock Fort Times
Online News

நீட் தேர்வு விவகாரம்  : தமிழக கவர்னருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்…!

நீட் தேர்வு , மாணவர்களுக்கு கட்டாயம் தேவை என்றும், நீட் தேர்வு தொடர்பான மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்றும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், கவர்னர் பதவிக்கான கண்ணியத்தை குறைக்கும் வகையில் கவர்னர் ரவி செயல்படுகிறார். நீட் விலக்கு தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என பேசி உள்ளது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

தான் வகிக்கும் கவர்னர் பதவியை ஆர்.என்.ரவி கேவலப்படுத்துகிறார் என்று தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கவர்னர் பதவிக்கு உரிய தகுதியோடு ரவி நடந்து கொள்ளவில்லை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

ஆளுநரை திரும்ப பெறவும், அவர் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றவும் சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் தலைவர்  செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்