தமிழ்நாட்டில், ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட ‘எண்ணித் துணிக’ என்ற நிகழ்ச்சி சென்னை ராஜ்பவனில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி மாணவரின் தந்தை ஒருவர் கேட்ட கேள்விக்கு, பயிற்சி மையம் இருந்தால் தான்’ நீட்’ தேர்வில் மாணவர்கள் வெற்றிபெற முடியும் என்ற போலி பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். ‘நீட்’ தேர்வு விலக்கு மசோதாவுக்கு எந்த காலத்திலும் கையெழுத்து போட மாட்டேன். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும். நீட் தேர்வு தேவை என்பதில் நான் எப்போதும் உறுதியாக இருப்பேன் என்று பதில் அளித்தார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.