Rock Fort Times
Online News

முகநூல் மூலம் திருச்சி வியாபாரியிடம் ரூ.1 கோடியே 7 லட்சத்தை சுருட்டிய மர்ம கும்பல்…!

திருச்சி கண்டோன்மெண்ட் ஸ்டேட் பேங்க் ஆபீஸ் காலனியை சேர்ந்தவர் ஜோசப் கந்தரசாமி. இவர், திருச்சியில் மரம் சம்பந்தப்பட்ட வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று செல்போனில் முகநூல்( பேஸ்புக்) பார்த்துக் கொண்டிருந்தபோது,பங்குச் சந்தை ஒன்றில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில், அவர் அந்த நிறுவனத்தின் பெயரில் செயல்பட்டு வந்த வாட்ஸ் அப் குழுவில் இணைந்துள்ளார். அந்தக் குழுவின் அட்மின் ஆக சஞ்சய் தத் என்பவர் இருந்துள்ளார். மேலும், ஜோசப் சுந்தரசாமியிடம் சஞ்சய்தத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மூன்று முதல் பத்து மடங்கு லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். அதோடு பங்கு சந்தை குறித்த காணொளி வகுப்பில் சேருமாறும் கூறியுள்ளார். இதை நம்பிய ஜோசப் சுந்தரசாமி 97 லட்சத்தை தனது கணக்கில் இருந்தும், தனது மனைவியின் கணக்கில் இருந்தும் வெவ்வேறு தவணைகளாக அனுப்பியுள்ளார். மேலும், ஜோசப் சுந்தரசாமி அந்த நிறுவனத்தின் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அதில் இவரது கணக்கில் முதலீட்டுடன் லாபமும் சேர்த்து ஒரு கோடியே 92 லட்சத்து 58 ஆயிரத்து 40 ரூபாய் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அவரால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. சஞ்சய் தத்தையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதைத் தொடர்ந்து லீனா ஜெரிப் என்பவரை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது லீனா ஜெரிப் தங்களது விஐபி பிராட் செக்யூரிட்டிஸ் என்னும் மொபைல் செயலியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதையும் நம்பிய ஜோசப் சுந்தரசாமி
ரூ.10 லட்சத்தை வெவ்வேறு தவணைகளாக முதலீடு செய்துள்ளார். இதை அடுத்து அந்த செயலியில் 14 ஆயிரத்து 554 டாலர் பணம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதிலும் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. உடனே, லீனா ஜெரிப்பை தொடர்பு கொண்டபோது முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜோசப் சுந்தரசாமி இது குறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி வியாபாரியிடம் ரூ.ஒரு கோடியே 7 லட்சத்தை சுருட்டிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

தனது வீட்டில் வளர்க்கப்படும் பசு, ஈன்ற கன்றுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி!

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்