Rock Fort Times
Online News

திருச்சியில் பயங்கரம் ! *தம்பியை கர்லாக்கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணன் !

அண்ணன் – தம்பி இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில், கர்லாக்கட்டையால் தன் உடன் பிறந்த தம்பியை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. .திருச்சி கீழ தேவதானத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகன்கள் ரமேஷ், பிருத்திவிராஜ் . இன்று காலை சகோதரர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி விட்டு சென்றனர்.  இதன் பின்னர் மதியம் 1 மணியளவில், பிரித்விராஜ்,  ரமேஷ் மற்றும் அவரது நண்பர் சௌந்தர் ஆகிய மூன்று பேரும் வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது மீண்டும் அவர்களுக்கிடையே சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்திரமடைந்த ரமேஷ் அங்கிருந்த கர்லாக்கட்டையால் தனது தம்பியான பிரித்விராஜின் தலையில் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பிரித்விராஜ் இறந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சௌந்தர், ரமேஷ் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.  மாடிக்கு சென்ற மூவரும் என்ன ஆனார்கள் என தெரியாத நிலையில் அவரது குடும்பத்தினர் மூன்றாவது மாடிக்கு சென்று பார்த்த போது, பிரித்திவிராஜ் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.  இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரித்திவிராஜ் திருமணம் ஆகாத நிலையில், ரமேஷின் மனைவிக்கும் (அண்ணி) அவருக்கும் தகாத உறவு ஏற்பட்டதாகவும் என்ற கோணத்திலும் மேலும் இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாகவும்,அதனால் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்