Rock Fort Times
Online News

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் இஸ்லாமியர்…

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது மஸ்தான் (வயது 45). இவர் கடந்த 10 ஆண்டுகளாக சபரிமலை ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதமிருந்து சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அதேபோல இந்த ஆண்டும் மாலையணிந்து 48 நாட்கள் விரதமிருந்து பம்பை வழியாக சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்க உள்ளார். மதம், மொழிகளைக் கடந்து இவர் ஆண்டுதோறும் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து வருவது மனித நேயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்