தமிழகத்தில் கலர் அப்பளம் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுவதால், அவை உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்ற உணவு பாதுகாப்புத் துறையின் ஆய்வின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, செயற்கை நிறமூட்டிகள் கலந்த கலர் அப்பளங்களை தொடர்ந்து உட்கொள்வது குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் கலர் அப்பளம் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

Comments are closed.