Rock Fort Times
Online News

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழப்பு? 150-க்கும் மேற்பட்டோர் மயக்கம்…!

ஒடிசா மாநிலம், புரியில் உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று(16-07-2026) நடைபெற்றது. இதில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் புரியின் பிரதான சாலையான கிராண்ட் சாலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மதியம் 2 மணி அளவில், கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், பல பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில், 150 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து, அங்கிருந்த மீட்புக் குழுவினர் மற்றும் பாதுகாப்பது படையினர், மயங்கி விழுந்தவர்களை உடனடியாக மீட்டுப் புரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில்
இருவர் உயிரிழந்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்