முரசொலி மாறன் பிறந்தநாள்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…!
முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த முரசொலி மாறனின் 91- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முரசொலி மாறன் திருவுருவ படத்திற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்
பகுதி கழக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், சபியுல்லா, செந்தில், மோகன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
Comments are closed.