தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க திருச்சி மாநகர அமைப்பாளர் திருநாவுக்கரசு இல்ல காதணி விழா: கோலாகலமாக நடைபெற்றது…!
தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட அமைப்பாளரும், திரு பில்டர்ஸ் நிர்வாக இயக்குனருமான கே.திருநாவுக்கரசு – டி.சுஜாதா தம்பதியினரின் அன்பு மகன் டி.எஸ்.கோகுல் ( எ )அபிஷேக் காதணி விழா, திருச்சி உய்யக்கொண்டான் திருமலை வி.எல்.வித்யா மஹாலில் ஆகஸ்ட் 15 அன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் வி.ஜே.செந்தில் தலைமை வகித்தார்.
சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மைதீன் கோவி.சாமிநாதன், பொருளாளர் என்.மாணிக்கம், எஸ்.மயில்வாகனன், ஆர்.மாணிக்கம், கே.பி.டி. பழனிவேல், பி.மகாலிங்கம், டைமண்ட் பாலு, தங்கம் ரத்தினக்குமார், எம்.ரவி, வ.உ.சி. கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் கே.வைரமணி, மண்டலத்தலைவர் மு.மதிவாணன், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஆவின் கார்த்திகேயன், சிந்தாமணி எல்.முத்துக்குமார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், இன்ஜினியர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.