Rock Fort Times
Online News

திருச்சியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் தாய்- மகள் படுகாயம்…!

திருச்சி, உறையூர் டாக்கர் ரோட்டில் தரைக்கடைகள் அமைந்துள்ளன.
இங்கு, அப்பகுதியில் உள்ள மக்கள் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று( ஜூன் 24) இருசக்கர வாகனத்தில் காய்கறி வாங்குவதற்காக பெண் ஒருவர் தனது 7 வயது மகளுடன் அங்கு வந்தார். காய்கறி வாங்கிக் கொண்டிருக்கும் போது சாலையோரம் உள்ள வேப்ப மரத்தின் கிளை ஒன்று திடீரென முறிந்து தாய்-
மகள் மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.காற்றின் காரணமாக மரக்கிளை முறிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்