கோடை காலம் முடிந்த பிறகும் திருச்சியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பணிக்கு செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வியர்வையில் நனைந்து வருகின்றனர். திருச்சியில் மழை பெய்யாதா என்பதுதான் அவர்களது ஏக்கமாக இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் உள்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று(30-09-2024) முதல் வருகிற ஐந்தாம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை முதலே திருச்சி மாநகர பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்தபடியே காலை சுமார் 11 மணி அளவில் திருச்சி மாநகர பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து ஓரளவிற்கு குளிர்ச்சி நிலவியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Comments are closed.