அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இன்று ( 17.07.2023 ) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு 26-ம் தேதி வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளதால் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி அவரது பெற்றோர் மற்றும் மனைவி திருச்சி துவாக்குடி அருகே உள்ள திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலமான திருநெடுங்களநாதர் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர். திருநெடுங்களநாதருக்கு அர்ச்சனை செய்து வழிபட்ட பின் பிரகாரத்தில் உள்ள வராகி அம்மனையும், ஏனைய பரிவார தெய்வங்களையும் வணங்கினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.