Rock Fort Times
Online News

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த திருச்சி நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜு குடும்பத்தினருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல்…!

குவைத்தில் தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் உள்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  அவர்களில் திருச்சி நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜீவும் ஒருவர். அவர்களின் உடல் குவைத்தில் இருந்து ராணுவ விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சின் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.  அதனைத்தொடர்ந்து அங்கிருந்து உடல்கள் அனைத்தும் அவரவர் சொந்த மாவட்டத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.  அந்தவகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நவல்பட்டை சேர்ந்த ராஜு உடல் கொச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டது. அவரது உடல், நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  இந்நிலையில், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராஜு இல்லத்திற்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினார்.  அப்போது திமுக ஒன்றிய செயலாளர் கங்காதரன், ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், கழக நிர்வாகி தங்கமணி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்