Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சிக்கு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை…!

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வருகிற 06.05.2024 திங்கட்கிழமையன்று சித்திரை தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இது பொருந்தும் எனவும், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் இருந்தால் இந்த விடுமுறை பொருந்தாது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட விடுமுறை நாளில் அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.  இந்த உள்ளூர் விடுமுறையானது 2024 பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொருந்தாது எனவும் இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற சனிக்கிழமை வேலைநாளாக இருக்கும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்