திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் 2010-ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் திருச்சி சிந்தாமணியை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் எஸ்.சரவணன் மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக நியமிக்கப்பட்டுள்ளார் இவர், 2009-ம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்தார். 2010-ம் ஆண்டு முதல் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், சிவில் வழக்குகள் போன்ற பல வழக்குகளை திறம்பட நடத்தி வெற்றி கண்டவர். மேலும், ஏழை- எளிய மக்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனைகளும், குடும்ப நல ஆலோசனைகளும் வழங்கி வருகிறார். ஏழைகளுக்கு இலவச சட்ட உதவிகளும் செய்து வருகிறார். அகில பாரத வழக்கறிஞர் சங்கத்தின் திருச்சி மாவட்ட துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளராக இருந்து தனது பணியை திறம்பட செய்து வருகிறார். தற்போது மத்திய அரசின் நோட்டரி பப்ளிக்காக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சக வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.