Rock Fort Times
Online News

மணிப்பூர் சம்பவம் : பா.ஜ.க. அரசை கண்டித்து தெற்கு மாவட்ட தி.மு.க.மகளிர் அணி ஆர்ப்பாட்டம்…!

தி.மு.க. தலைமை கழகம் அறிவிப்பின்படியும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழி காட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை நிகழ்வுகளுக்கு நடவடிக்கை எடுக்காத பா.ஜ.க. அரசை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொற்கொடி தலைமையில் இன்று ( 24.07.2023 ) ஆர்ப்பாட்டம் நடந்தது. மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ரம்யாபேகம் வரவேற்றுப் பேசினார்.

இதில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள்கலந்து கொண்டு, மணிப்பூரில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்று அம்மாநில முதலமைச்சா் பதவி விலக கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் மு.மதிவாணன், மாநில இணை செய்தி தொடர்பாளர் கவிஞர் சல்மா, மாவட்ட துணைச் செயலாளர் லீலாவேலு, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கயல்விழி, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் லதா, மலர்விழி, பூமிகா தேவி, ரதி, தேக்கமலர், ஞானதீபம், மரிய மேரிகிளாரா, சீலா லாரன்ஸ், செல்வி, லதா மற்றும் மாநகர மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், திமுக கவுன்சிலர்கள், உள்ளிட்ட மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர். மாநகர அமைப்பாளர் சிந்துஜா நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்