Rock Fort Times
Online News

திருச்சி ஏர்போர்ட் அருகே பெண் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

திருச்சி விமான நிலைய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காந்தி நகர் பிரதான சாலையில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதியன்று 40 வயது பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் சிவசண்முகம் என்பவர் கூடா நட்பின் காரணமாக இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் சிவசண்முகத்தை கைது செய்து, திருச்சி 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல் நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சிவ சண்முகத்துக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அரசுதரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், வழக்கு குறித்த வாதங்களை சிறப்பாக முன்வைத்ததன் காரணமாகவே கொலை குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை கிடைத்துள்ளது என சக வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர் ஆனந்தனை பாராட்டினர்.மேலும் இக் கொலை வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த திருச்சி ஏர்ப்போர்ட் காவல்நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சாட்சி சாட்சிகளை குறித்த நேரத்தில் ஆஜர்படுத்திய தற்போதைய காவல் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீசாரை, திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் என். காமினி பாராட்டினார்.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்