தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் எதிர்கால அரசியல் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் விஜய் கட்சியில் இணைந்தார். பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். இந்நிலையில் ஓ .பன்னீர்செல்வம் நேற்றைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இது, அவருடன் இணைந்து பயணித்து வந்த அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், திமுகவுக்கு செல்ல விரும்பாத அதிமுக முன்னாள் அமைச்சர் திருச்சி வெல்லமண்டி நடராஜன் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதேபோல ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Comments are closed.