திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக முதன்மைச் செயலாளரும், சட்டமன்றத் துணைத் தலைவருமான கே.என்.நேரு தனது தொகுதிக்கு உட்பட்ட 51, 52, 53, 54, 55 மற்றும் 56 ஆகிய வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். செடல் மாரியம்மன் கோவில் பகுதி, கூனி பஜார், மார்சிங்பேட்டை, அந்தோணியார் கோவில் தெரு, கான்வென்ட் ரோடு, மேலப்புதூர், தலைமை தபால் நிலையம், முத்தரையர் சிலை பகுதி, ராஜா காலனி, பெரியமிளகுபாறை, கருமண்டபம், ராம்ஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது
மாநகர கழக செயலாளரும், மேயருமான மு.அன்பழகன், வழக்கறிஞர்கள் ஓம்பிரகாஷ், பாஸ்கர், கவியரசன், அந்தோணி, மணிவண்ண பாரதி, மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம், குடமுருட்டி சேகர், டோல்கேட் சுப்ரமணியன், கமல் முஸ்தபா, மோகன்தாஸ், மார்சிங்பேட்டை செல்வம், கிராப்பட்டி செல்வம், கலைச்செல்வி, கவிதா, தனசேகர் , கருப்பையா உள்ளிட்ட பலர் உடன் சென்று இருந்தனர்.

Comments are closed.