Rock Fort Times
Online News

“காந்தியை அவமதிப்பது எனது நோக்கம் அல்ல”- ஆளுநர் ரவி…!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜனவரி 23ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நேதாஜி பிறந்தநாள் விழாவில், மகாத்மா காந்தி நடத்திய சுதந்திர போராட்டத்தால் 1942 க்கு பிறகு ஒன்றுமே நடக்கவில்லை. நேதாஜி இல்லை என்றால் 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்து இருக்காது என்று பேசினார். அவரது இந்த பேச்சு காங்கிரசார் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது இந்த பேச்சுக்கு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், காந்தியை, தான் அவமரியாதை செய்ததாக தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சி நடக்கிறது. தான் பேசிய அனைத்தும் ஆவணங்களின் அடிப்படையிலான உண்மைகளே என்றும், காந்தியை அவமதிப்பது தனது நோக்கம் அல்ல. நான், மகாத்மா காந்தி மீது உயரிய மதிப்பை கொண்டுள்ளதுடன் அவருடைய போதனைகளை என் வாழ்க்கையின் லட்சியங்களாக கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவை மாற்றமா? முதல்வர் மு.க .ஸ்டாலின் பதில்...

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்