Rock Fort Times
Online News

நாட்டை காக்கும் வேள்வியில் நானும் பங்கு பெறுவது பெருமை – திருச்சி விமான நிலையத்தில் கமல்ஹாசன்…!

திருச்சி மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள  மக்கள் நீதி மய்ய கட்சி தலைவரும்,  நடிகருமான கமல்ஹாசன் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று(02-04-2024)  திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.  அவருக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன்,  இந்தியாவின் மிக பழமையான கோட்டைகளில் ஒன்று செங்கோட்டை.  அதற்கும் மூத்தது செயிண்ட் ஜார்ஜ் கோட்டை.  இந்த இரண்டிற்கும் மூத்தது திருச்சி மலைக்கோட்டை.  அந்தக் கோட்டையில் உள்ள ஊர் இன்று திமுக கோட்டையாக உள்ளது. அந்தக் கோட்டை கதவுகள் எனக்கு திறந்திருக்கிறது.  நான் இங்கு வந்திருக்கிறேன். நாட்டைக் காக்கும் இந்த வேள்வியில் நானும் பங்கு கொள்வது எனக்கு பெருமை என்று கூறினார்.  திருச்சியில் நடந்த முதல் பிரச்சார  பொதுக்கூட்டத்தில் இந்த பிரச்சார பொதுக்கூட்டம் இந்தியாவிற்கே திருப்புமுனையாக இருக்கும் என முதலமைச்சர் பேசியது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன்,  அது மிகையான வார்த்தை அல்ல நேர்மையான நம்பிக்கை என பதில் அளித்தார். பேட்டியின்போது மக்கள்நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 940

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்