வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரை தயாநிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரிப்பு…!
வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று (ஏப்ரல் 2) மாலை தி.மு.க தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு உரையாற்ற தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று கார் மூலம் வேலூர் சென்றார். இந்தநிலையில், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள மு.க அழகிரி மகன் துரை தயாநிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தார். அப்போது அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார். முன்னதாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை தயாநிதி சில நாட்களுக்கு முன்பு தான் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு துரை தயாநிதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.