திருச்சி கே.கே.நகர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட நூலகத்தை இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.திறந்து வைத்தார்…!
நூலகம் தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது, நல்வழிப்படுத்துகிறது என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு அரசு பள்ளியிலும் நூலகம் இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தனக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட புத்தகங்களையும் அரசு நூலகங்களுக்கு முதல்வர் இலவசமாக வழங்கி வருகிறார். முதல்வரின் அறிவுறுத்தலின்படி, திருச்சி கே.கே.நகரில் அமைந்துள்ள அரசு உயர்நிலை பள்ளியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.நூலகத்தை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர், நூலகத்தின் அவசியம் குறித்து ஆசிரியர்கள், மாணவர்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து, மாணவர்களிடையே கலந்துரையாடினார். ஆசிரியர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது மாமன்ற உறுப்பினர் மலர்விழி ராஜேந்திரன், தலைமை ஆசிரியர் அழகுசுந்தரம் மற்றும் நாகராஜன் கலைவாணி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
Comments are closed.