விஜயதசமி பண்டிகை இன்று (அக்டோபர் 20) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நன்னாளில் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தலைத் தொடங்குவது மரபாகக் கருதப்படுகிறது. அந்தவகையில், இன்று அரசு விடுமுறை தினமாக இருப்பினும், 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதேபோல விஜயதசமி பண்டிகையையொட்டி மும்மூர்த்திகள் ஸ்தலமான திருச்சி அருகே உள்ள உத்தமர் கோவிலில், சரஸ்வதிதேவி சன்னதியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு நெல் மணிகளில் எழுத கற்றுக் கொடுத்து, சரஸ்வதிதேவியை வழிபட்டனர். இங்குள்ள சன்னதியில் சரஸ்வதி கையில் ஓலைச் சுவடிகளைக் கொண்டு அருள் பாலிப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வழிபாடு செய்தனர்.

Comments are closed.