தமிழக சிறைத்துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2018-ம் ஆண்டு ஆண் கைதிகளால் இயக்கப்படும் பெட்ரோல் பங்க் சென்னை புழலில் முதல் முறையாக திறக்கப்பட்டது. தொடர்ந்து திருச்சி, வேலூர், கோவை உள்ளிட்ட 5 இடங்களில் சிறைத்துறை சார்பில் பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச்சிறை அருகில் 1,170 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.1.92 கோடி மதிப்பில் பெண் கைதிகள் மட்டும் இயக்கும் பெட்ரோல் பங்க் கட்டப்பட்டது. இந்தியாவிலேயே முதல்முறையாக பெண் கைதிகளால் இயக்கப்படும் இந்த பெட்ரோல் பங்கை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று ( 10.08.2023 ) தொடங்கி வைத்தார். பெட்ரோல் பங்க்கின் ஒரு பகுதியில் கைதிகள் தயாரிக்கும் பொருள்களும் விற்பனை செய்யப்படுகிறது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.