திருச்சி பொன்மலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் காய்கறிகள், மீன்கள் மற்றும் இறைச்சி வகைகள் தாராளமாக கிடைக்கும். மேலும், வீட்டில் வளர்க்கும் கலர் கலரான மீன் வகைகள், பறவை இனங்கள், வகை வகையான நாய்கள் போன்றவையும் கிடைக்கும்.
இதனால், இந்த வாரச் சந்தைக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள். அந்தவகையில் இன்று(04-08-2024) ஞாயிற்றுக்கிழமை என்பதால் கறி வாங்குவதற்காக ஸ்கூட்டரில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் பொன்மலை சந்தையில் கறி வாங்கிவிட்டு திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடைய வாகனத்திற்கு முன்பு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. அந்த லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அந்த நேரத்தில் எதிரே வந்த அரசு பஸ் மீது எதிர்பாராதமாக ஸ்கூட்டர் மோதியது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். இதில், ஒரு வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த மற்றொருவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்சி கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அரசு பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
எனவே, திருச்சி மாநகர காவல் துறையினர் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.