சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி, மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத் தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் சுப.சோமு, சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது முகையதீன், மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாநகராட்சி கவுன்சிலர் ரெக்ஸ் , மாவட்டத் துணைத் தலைவர்கள் பண்ணை கோபாலகிருஷ் ணன், சிக்கல் சண்முகம், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ராஜா டேனியல் ராய், ரவி,ஜோசப் ஜெரால்ட், செல்வகுமார், கனகராஜ், மாவட்ட பொதுச் செயலா ளர்கள், மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சந்திரன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல திருச்சி மாநகராட்சி கவுன்சிலரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினருமான எல்.ரெக்ஸ் திருச்சி காட்டூர், வசந்த நகர், பாலாஜி நகர் விஸ்தரிப்பு, கணேஷ் நகர், கைலாஷ் நகர், அண்ணா சாலை, பாலாஜி நகர், அண்ணா சாலை விஸ்தரிப்பு உள்ளிட்ட நலசங்கங்களில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தார். நிகழ்வில் நலச்சங்க தலைவர்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் கோட்டத்தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.