Rock Fort Times
Online News

ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு…!

திருச்சி காஜா பேட்டை வடக்கு கல்லுக்கார தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அமராவதி (வயது 50). இவர் திருச்சி பாலக்கரை ஸ்டார் தியேட்டர் பகுதியிலிருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு டவுன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அமராவதியின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கோட்டை குற்றபிரிவு போலீசில் அமராவதி கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்