Rock Fort Times
Online News

எம்.பி.க்களின் எண்ணிக்கையை கூட்டுவதால் நாடாளுமன்றம் கேலிக்கூத்தாகி விடும்…* திருமாவளவன் …!

மத்திய அரசு கொண்டுவர உள்ள தொகுதி மறு வரையறை குறித்து தமிழக எம்பிக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் இன்று(08-08-2026) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மையம், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட எம்பிக்கள் பங்கேற்கவில்லை. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘முதல்வர் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டோம். மூத்த தலைவர் ப.சிதம்பரம் பங்கேற்றார். அனைத்துக் கட்சிகளின் சார்பாக எம்.பிக்கள் தங்கள் கருத்தை பேசினார்கள். நிறைவாக முதல்வர் விஜய் பேசினார். தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். மக்களவையில் 543 என்ற எண்ணிக்கையும், தமிழகத்துக்கான 39 என்ற எண்ணிக்கையும் தொடர வேண்டும் என்பது தொடர்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எண்ணிக்கையை கூட்டுவதால் நாடாளுமன்றம் கேலிக்கூத்தாகிவிடும். எனவே தொகுதி மறுவரையறை கூடாது என்ற அடிப்படையில் அனைத்து எம்.பிக்களும் கருத்துகளை முன்வைத்தோம்” என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்