Rock Fort Times
Online News

தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக்கட்சி எம்பிக்கள் கூட்டம் நிறைவு:* பொதுமக்களை சந்தித்தார் முதல்வர் விஜய்..!

நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வந்துவிட வேண்டும் என்று பா.ஜ.க அரசு முயற்சி செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, தொகுதி மறுவரையறை பணிகளால், தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழகத்தை சேர்ந்த எம்.பி-க்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடத்த விஜய் தலைமையிலான த.வெ.க அரசு முடிவு செய்தது. இந்த கூட்டம் இன்று(08-08-2026) பிற்பகல் 3 மணிக்கு, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், முதல்வர் விஜய் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ்கள், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் வாயிலாக, தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி-க்களுக்கும்
அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தொகுதி மறுவரையறை கலந்தாய்வு கூட்டத்தில் காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க, ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன. ஆனால். தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க ஆகிய கட்சி எம்பிக்கள் பங்கேற்கவில்லை. மொத்தம் உள்ள 57 நாடாளுமன்ற உறுப்பினர்களில் முதலமைச்சர் விஜய் அழைத்துள்ள தொகுதி மறுவரையறை கூட்டத்திற்கு 20 எம்பிக்கள் மட்டுமே பங்கேற்றதாக தெரிகிறது. கூட்டத்தில் மேகதாது விவகாரம், காவிரி நீர் பங்கீடு குறித்து முதல்வர் விஜய் எம்பிக்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் கூட்டம் முடிந்து வெளியே வந்த முதல்வர் விஜய், அங்கு காத்திருந்த பொதுமக்களை சந்தித்தார். அப்போது அவர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்