Rock Fort Times
Online News

தமிழகம் வந்தார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…* அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (08-08-2026) மற்றும் நாளை என 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ச்சிகளை முடித்த அவர், அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார். அப்போது அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டார். திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக ரமண மகரிஷி ஆசிரமம் சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்டார். அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.40 மணியளவில் அருணாச்சலேசுவரர் கோவிலை சென்றடைந்தார். அங்கு கோவிலில் நடைபெற்ற அபிஷேக பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். மத்திய அமைச்சர் வருகையை முன்னிட்டு கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்