தமிழகத்தின் முன்னணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான “மெஜஸ்டிக் மஹாராஜா” தனது எட்டாவது கிளையை திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நிறுவியுள்ளது. ஏற்கனவே கடந்த 27ம் தேதி முன்னோட்ட திறப்புவிழா நடைபெற்ற நிலையில் இன்று (02-10-2026) பிரம்மாண்ட திறப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவிற்கு வந்திருந்தவர்களை மெஜஸ்டிக் மஹாராஜா நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர்களான சவுக்கத் அலி, அன்வர்தீன், ரபி, பஷீர், ஆசிர், ஜியாவுதீன், ஹஸ்ரப், அப்ரர், நவீத், இர்ஷாத், உவைல், ஸூஹைல் ஆகியோர் வரவேற்றனர். மொத்தம் நான்கு தளங்களோடு 1 லட்சம் சதுரடியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஷோரூமில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஏற்ற ஆடை ரகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. சரஸ்வதி, ஆயூதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து வரவிருக்கும் விழாக்காலத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளும், அதிரடி ஆஃபர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஷோரூமிற்கு உள்ளேயே எஸ்கலேட்டர் வசதி பெர்ஃப்யூம் காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள், ஹேண்ட்பேக்ஸ் உள்ளிட்ட அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் திருச்சி மாவட்ட மக்களுக்கு இது ஒரு புதுவித ஷாப்பிங் அனுபவமாக இருக்கும். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக துணை பொதுச் செயலாளர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு எஸ்.விஜி, திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் செந்தில், திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர் தர்கா எஸ்.சௌகத், வெல்லமண்டி என்.ஜவகர், திருச்சி கிழக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ்.இருதயராஜ், வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகளான பொதுச் செயலாளர் வீ.கோவிந்தராஜூலு, மண்டல தலைவர் எம்.தமிழ்செல்வம், மாவட்ட தலைவர் எஸ்.ஸ்ரீதர், மாநகர செயலாளர் எஸ்.ஆர்.வி. கண்ணன் மற்றும் திருச்சியின் முக்கிய தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், நண்பர்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மெஜஸ்டிக் மஹாராஜா நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.