திருச்சி, உறையூர் அருணா தியேட்டர் அருகே இயங்கி வரும் டாக்டர்ஸ் டயாக்னாஸ்டிக் சென்டர் தில்லைநகர் 7 வது கிராஸில் “சிட்டி சென்டர்” எனும் புதிய பரிசோதனை மையத்தை தொடங்கியுள்ளது. இன்று நடைபெற்ற திறப்பு விழாவில், இந்திய மெடிக்கல் கவுன்சிலின் துணைத்தலைவர் டாக்டர் ஆர்.குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் டாக்டர்ஸ் டயாக்னாஸ்டிக் சென்டரின் இயக்குனர்களான டாக்டர்கள் பி.கே ரத், பி.ராமகிருஷ்ணன், டி. சிவசுப்பிரமணியன், ஆர். ரமேஷ், ஆர்.ரவி மற்றும் மேலாளர் ஆர்.ஜோதிராமன் உள்ளிட்ட பலர் உள்ளனர். சிட்டி சென்டரின் சிறப்பம்சங்கள் குறித்து டாக்டர்ஸ் டயாக்னாஸ்டிக் சென்டரின் நிர்வாகத்தினர் கூறும் போது., ஆசியாவிலேயே அதிக மருத்துவமனைகள் கொண்ட இடம் நமது திருச்சி, தில்லைநகர். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மனைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திருச்சி மட்டுமின்றி அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உடல்நலம் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவ சிகிச்சை பெறுவதுண்டு. மருத்துவ உதவி தேவைப்படும் எமர்ஜென்சி காலகட்டத்தில் அவர்களுக்கான பரிசோதனை முடிவுகளை துல்லியமாக வழங்கிட எங்களிடம் அதின நவீன ஜெர்மன் டெக்னாலஜி கொண்ட பரிசோதனை கருவிகள் இருக்கின்றன. இதனால் மருத்துவ உதவி தேவைப்படும் அவசர காலகட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்காண முடிவுகளை துல்லியமாக சீக்கிரத்தில் வழங்கிட முடியும்.இதனை கருத்தில் கொண்டே, திருச்சி தில்லைநகரில் “சிட்டி சென்டர்” தில்லைநகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா சலுகையாக வருகிற 30ம் தேதி வரை இலவசமாக ரத்த – சர்க்கரை பரிசோதனை செய்யப்படும் என்று கூறினர்.
Comments are closed.