கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி… முதல்வர் விஜய் அறிவிப்பு..!
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ. 75,000 வரை விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கடந்த மே 25ம் தேதி ரூ. 50,000 வரை பயிர்க்கடன் பெற்றிருந்த குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்திருந்தது. இவ்விவசாய கடன் தள்ளுபடி குறித்து மறுபரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. அந்த கோரிக்கைகள் மீதான மறு ஆய்வு கூட்டமானது நேற்று (ஜூன் 15) தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டு மறு பரிசீலனை குறித்து ஆலோசித்தனர். இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை, அதாவது ரூ. 75,000க்குள் கடன் பெற்றவர்களுக்கு முழு தொகையும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000-ம் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Comments are closed.