திமுக கூட்டணியில் மா.கம்யூனிஸ்ட்- மதுரை, திண்டுக்கல் இ.கம்யூனிஸ்ட்- திருப்பூர், நாகை தொகுதிகளில் போட்டி…!
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு களில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், மதிமுகவுக்கு ஒரு தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில குழு செயலாளர் ஆர்.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.