திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி (வயது 57), சந்திரசேகர் (49), சுபநந்தினி என 2 மகன்கள் ஒரு மகள். அண்ணன்- தம்பிக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக ஏற்கனவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றதாகவும், இந்த சம்பவத்திலிருந்து இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு கிருஷ்ணமூர்த்தி வயல்காட்டில் இருந்து பால் கேனுடன் இருசக்கர வாகனத்தில் நாயுடு தெரு பகுதிக்கு வந்தபோது அவரை சந்திரசேகர் வழிமறித்து சரமாரியாக வெட்டி உள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் சந்திரசேகருக்கும் காயம் ஏற்பட்டு இருந்தது. அவர் சிகிச்சைக்காக துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.