திருச்சியில் அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை: புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வழங்கினார்…!
அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பூலாங்குடி காலனி, பழங்கனாங்குடி ஊராட்சிக்குட்பட்ட கழக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் உரிமை அட்டைகளை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையிலும், ஒன்றிய கழக செயலாளர் எஸ்.எஸ்.ராவணண் முன்னிலையிலும் வழங்கப்பட்டது. விழாவில், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சூரியூர் ராஜா மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் செல்வராஜ் சவரியம்மாள், ஒன்றிய அவைத் தலைவர் குண்டூர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி சூரியூர் அழகர், மாவட்ட பிரதிநிதி விஜயராணி சுரேஷ்குமார், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் விஜி ஆறுமுகம், வழக்கறிஞர் கிழக்குறிச்சி வீரமணி, சோழமாதேவி சன்னாசி மற்றும் கிளை கழக செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.