தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்றி தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்துத் துறை கூடுதல் செயலராக இருக்கும் பணீந்திர ரெட்டிக்கு இயற்கை வளங்கள் துறை செயலராக கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை ஆணையராக சண்முகசுந்திரம், சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளிப்புத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையராக ரத்னா, புவியியல் மற்றும் கனிமவளத்துறை இயக்குநராக நிர்மல்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த சிம்ரன்ஜீத் சிங், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய செயல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் மாநகராட்சி ஆணையராக எஸ்.பாலசந்தர், மதுரை மாநகராட்சி ஆணையராக பிரவீன்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். –

Comments are closed, but trackbacks and pingbacks are open.