தரக்குறைவாக கருத்து பதிவிடும் நாம் தமிழர் கட்சியினரை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் விடமாட்டேன்: திருச்சி எஸ்.பி. வருண்குமார் …!
நாம் தமிழர் கட்சியினர் மற்றும் திருச்சி எஸ்.பி வருண்குமார் இடையே வார்த்தை மோதல் வலுத்து வரும் நிலையில், அவரது மனைவியும் புதுக்கோட்டை எஸ்.பியுமான வந்திதா பாண்டே பற்றியும் நாம் தமிழர் கட்சியினர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள எஸ்பி வருண்குமார், வெளிநாடுகளில் இருந்து போலி ஐடிக்களில் இயங்குபவர்களை விடப்போவதில்லை எனவும், ஆபாசத்திற்கும் அவதூறுக்கும் முடிவுரை எழுதவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அரசியலுக்கும், இந்த விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது வீட்டில் உள்ள பெண்களையும், எனது குழந்தைகளையும், எனது குடும்பத்தாரையும் அவதூறு பேசி, மிரட்டல் விடுத்த நபர்களை விடமாட்டேன். சட்டத்தின் முன்னால் கண்டிப்பாக கொண்டு வந்து நிறுத்துவேன். என் சட்டப் போராட்டம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.