100 பவுன் பத்தாது இன்னும் வேணும் !திருச்சியில் வரதட்சணை கொடுமை – கணவன் உட்பட 5 பேர் மீது பாய்ந்தது வழக்கு !
திருச்சி தென்னூர் குத்பிசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நூருல் ரூபலி (வயது 25). இவருக்கும் மதுரை கோமதிபுரம் முல்லை வீதி ஆறாவது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த அபுதாஹிர் சித்திக் (32) என்பவருக்கும் கடந்த 2016 இல் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. அபுதாஹீர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். திருமணத்தின்போது ரூபலியின் பெற்றோர் 100 பவுன் நகை, மாருதி கார் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுத்தனர். இந்த நிலையில் மீண்டும் மனைவியிடம் அபுதாஹிர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். இதை தட்டிக் கேட்டபோது கணவர் மற்றும் மாமனார்,மாமியார் ஆகியோர் சேர்ந்து ரூபலினை வீட்டை விட்டு துரத்தியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட தனது பெண்ணுக்கு நீதி கேட்டு ரூபாலியின் பெற்றோர் ஜமாத்தில் நீதி கேட்டுள்ளனர். அபுதாஹீர் தரப்பினர் நகைகளை திருப்பிக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் கூறியபடி நகையை திருப்பிக் கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட ரூபலி திருச்சி மகிளா நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அபுதாஹீர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.