Rock Fort Times
Online News

திருச்சியை அடுத்த பச்சமலையில் 500 அடி பள்ளத்தில் பாய்ந்த லாரி- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…!

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், தென்புறநாடு ஊராட்சியை சேர்ந்த பச்சைமலை பகுதியில் குண்டக்காடி கிராமத்தில் இருந்து மரவள்ளி கிழங்கு ஏற்றி கொண்டு ஆத்தூர் நோக்கி லாரி ஒன்று புறப்பட்டது. செந்தாரப்பட்டியை சேர்ந்த மோகன் ( 62) என்பவர் அந்த லாரியை ஓட்டினார்.  அந்த லாரி மலையின் மேலிருந்து கீழே இறங்கும் வழியில் மூன்றாவது வளைவில் திரும்பும் பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் ஓரத்தில் அமைந்திருந்த தடுப்புச் சுவரை இடித்து தள்ளி சுமார் 500 அடி பள்ளத்தில் தலை குப்புற பாய்ந்தது.  இதுகுறித்து தகவல் அறிந்த மலைவாழ் மக்கள் துரிதமாக செயல்பட்டு லாரியில் இருந்த டிரைவரை சிறுகாயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர். லாரியை மீட்கும் பணி நடந்து வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்