Rock Fort Times
Online News

“யாருடைய நிர்பந்தத்தாலும் நான் தவெகவில் இணையவில்லை”…* அடித்து சொல்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!

‘குதிரை பேரம்’ நடத்தியும், கட்டாயப்படுத்தியும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜய பாஸ்கரை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துள்ளனர் என்று திமுக குற்றம் சாட்டியுள்ளதோடு லஞ்ச ஒழிப்புத் துறையிடமும், தமிழக ஆளுநரிடமும் புகார் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள எம்.ஆர். விஜயபாஸ்கர், யாரும் என்னை
நிர்பந்திக்கவில்லை தானாகவே தவெகவில் இணைந்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், “தவெகவில் சேர எனக்கு அக்கட்சியில் இருந்தோ அல்லது அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்களிடம் இருந்தோ யாரும் அழைப்பு விடுக்கவில்லை. தவெகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, சிவபதி போன்றோரிடம், கட்சிக்கு போன பின்பு அங்கு எவ்வாறான சூழல் உள்ளது என்று கேட்டேன். அதைத்தான் நான் பேட்டியில் சொன்னேன். நிர்வாகிகளின் கருத்தை கேட்டு, எந்த அழுத்தமும் இல்லாமல் முடிவெடுத்து, பல கட்ட யோசனைக்கு பிறகு நான் தவெகவில் சேர்ந்தேன். இது முழுக்க முழுக்க நான் எடுத்த முடிவு. என் சுய விருப்பத்தால்தான் நான் தவெகவில் இணைந்தேன். தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் நிர்பந்தத்தால் நான் தவெகவில் இணையவில்லை என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்