Rock Fort Times
Online News

மதுரை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்-அமைச்சர் விஜய் நிதியுதவி…!

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி அருகே இன்று(13-07-2026) அதிகாலை அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் பேருந்தில் பயணித்த ஆனந்தராஜ் (திருச்சி), சூர்யா (திருச்சி), முகமது யாசின் (திருவாரூர்), சிறியபுஷ்பம் (திருநெல்வேலி), ஆபிரகாம் (திசையன்விளை) ஆகிய 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும், விபத்தின் போது பயணிகள் நிழற்குடையில் உறங்கி கொண்டிருந்த முதியவரான பெருமாள் (70) என்பவர் மீது ஆம்னி பேருந்து மோதியதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பேருந்து விபத்து செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும அடைந்த தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சமும், படுகாயமடைந்த 7 நபர்களுக்குத் தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்த 15 நபர்களுக்குத் தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்