Rock Fort Times
Online News

வீடுகட்ட பணம் தர மறுத்த கள்ளக் காதலிக்கு அரிவாள் வெட்டு- லாரி டிரைவர் மீது வழக்கு…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி வள்ளிக்கண்ணு (வயது 59). இந்த தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார். வள்ளிக்கண்ணு திருச்சி பால்பண்ணை பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக சங்கிலியாண்டபுரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வருகிறார். இந்தநிலையில், அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஜான்சன் (55) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில், ஜான்சன் தனது வீட்டை புதுப்பித்து கட்டுவதற்கு வள்ளிக்கண்ணுவிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டார். ஆனால், அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜான்சன், வள்ளிக்கண்ணுவை அரிவாளால் வெட்டினார். இதில் அவரது தலை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார், ஜான்சன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கேட்டுக் கொடுக்காததால் கள்ளக்காதலியை வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்