Rock Fort Times
Online News

விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு…

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் விக்னேஷ். இவர் கடந்த 11ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் அருகே சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார்.

அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகரில் உள்ள சிக்னலால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது, அதனை அகற்ற வேண்டும் என அன்றைய தினமே உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் இன்று (19-01-2024) உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து உறவினர்கள் உள்ளிட்ட சுற்றியுள்ள பதினைந்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், விபத்துக்கு காரணமான போக்குவரத்து சிக்னலை ஏன் இன்னும் அகற்றவில்லை என கேட்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்