சமூகத்தில் பொருளாதார மற்றும் சூழ்நிலை காரணங்களால் எத்தனையோ விளிம்பு நிலை மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்ட எளிய மக்களுக்கான சேவையில் தொடங்கி, ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, ஆதரவற்ற முதியவர்களின் மறுவாழ்வுக்கான சமூகநலன் போன்ற பல்வேறு பணிகளை திருச்சி துரைசாமிபுரத்தில் உள்ள, தான் நடத்திவரும் தாய்வீடு என்கிற சேவை மையத்தின் மூலமாக தன்னார்வத்தோடு செய்து வருபவர்தான் எஸ்.எம். சிவக்குமார். இவரை தாய்வீடு சிவக்குமார் என்றால்தான் திருச்சியில் உள்ள அனைவருக்கும் எளிதில் தெரியும்.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக திருச்சி மாவட்டத்திலுள்ள மகளிர் காவல்நிலையங்களில் பெறப்படும் குடும்ப பிரச்சனைகளுக்கான கவுன்சிலிங், கொடும் குற்றம் இழைத்த ரவுடிகளை மனமாற்றம் செய்து, திருத்தி, அவரவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி வகை செய்தது என இவர் மேற்கொண்டு வரும் சமூக சேவைகளை பாராட்டி, குளோபல் ஹியூமன் பீஸ் யூனிவர்சிட்டி, சமீபத்தில் தாய்வீடு சிவக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. இதற்கான பாராட்டு விழா, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள சீனிவாசா ஏ/சி ஹாலில் செப்டம்பர் 26ம் தேதி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களை ராஜகுமாரி சிவக்குமார் வரவேற்றார்.
இவ்விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்த ராஜூலு, மங்கள் அன்ட் மங்கள் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் பி.மூக்கபிள்ளை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணியின் கமாண்டன்ட் எம்.ஆனந்தன், குரு ஹோட்டல் நிர்வாக இயக்குனர்கள் குரு ரெங்கநாதன், குரு சுப்பிரமணியன், எஸ்.டிவி நிர்வாக இயக்குனர் எஸ்.பாலசுப்பிரமணியன், ராக்போர்ட் டைம்ஸ் வார இதழின் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லெக்ஷ்மி நாராயணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி பேசினர்.
மேலும் இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மூத்த வழக்கறிஞர் சேசுபால்ராஜ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டல தலைவர் எம்.தமிழ்செல்வன், மாவட்ட தலைவர் வி.ஶ்ரீதர், மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி.கண்ணன், செயலாளர் ஆறுமுகபெருமாள், இளைஞரணி தலைவர் கே.எம்.எஸ்.மைதீன், செய்தி தொடர்பாளர் ப.திருமாவளவன், டோல்கேட் ரமேஷ், திருமகள் எண்டர்பிரைஸ் உரிமையாளர் ஏழுமலை, டாக்டர் கிருஷ்ணவேணி, குரு ஹோட்டல் இயக்குனர்கள் உஷா ரங்கநாதன், அமுதா சுப்பிரமணியன், திரைப்பட நடிகர் ஜெரால்டு மில்டன், இம்மானுவல் கல்வி குழுமத்தலைவர் மகேந்திரரூபன், போலீஸ் டி.எஸ்.பி ஜென்னீஸ் இளங்கோவன், இன்ஸ்பெக்டர் அஜீம், ஒய்வு பெற்ற காவல் அதிகாரி பாத்திமா, ராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முருகேசன், குணா, சகாதேவன், மல்லிகா, சுஜாதா, சேகர், டாக்டர்கள் கோமதி, புனிதா, ராஜேஷ், அஸ்வின் மெடிக்கல் மோகன், அஜீஸ் பிரியாணி சாதிக்பாட்ஷா, ஸ்பெக்ட்ரம் அன்பரசன், பொறியாளர்கள் துளசி, செந்தில், தேவராஜ், சக்திவேல், சரவணன், சந்திரசேகர், மோகன், பிரிட்டோ, தொழிலதிபர்கள் புகழேந்தி, மூர்த்தி, ஸ்டீபன், அலெக்ஸ் ராஜா, பாலாஜி மற்றும் கிஷோர் உள்ளிட்ட ஏராளமான பிரபல தொழிலதிபர்கள், அரசுத்துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள், வெஸ்ட்ரி வாக்கர்ஸ் கிளப் அங்கத்தினர்கள் என பலர் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மோகனாம்பாள், ராஜகுமாரி, பிரியதர்ஷினி, ஆரோக்கியமேரி, ஈரோடு சீனி, ராதிகா, சரவணன், சரவணவள்ளி, ரஜினி ராஜா மற்றும் ராக்போர்ட் வாக்கர்ஸ. கிளப் நண்பர்கள் உள்ளிட்ட பலர் சிறப்பாக செய்திருந்தனர்.
Comments are closed.