Rock Fort Times
Online News

த.வெ.க. ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது…- மு.க.ஸ்டாலின்…!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளிலும், திமுக 73 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று இருந்தாலும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. இதனால் பிற கட்சிகளின் ஆதரவை விஜய் நாடி வருகிறார். தற்போதைய நிலவரப்படி 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் இல்லாததால் ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை. இந்தநிலையில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது. முதல் 6 மாதங்களுக்கு தவெகவின் நடவடிக்கைகளை அமைதியாக கண்காணிப்போம். பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவதாக தவெக தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது அதனை நடைமுறைப்படுத்துவது கடினம். ஆகையால் மாதம் ரூ.1000 வழங்குவதை தவெக தொடர வேண்டும். ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்குவதாக தவெக தெரிவித்துள்ளது. அதனையும் செயல்படுத்தினால் மகிழ்ச்சி தான். மேலும் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பயனுள்ள திட்டங்களை தொடரவேண்டுமென தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்