திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர்- போலீசாரிடையே தள்ளுமுள்ளு, 50 பேர் கைது…!
தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான கோவில்கள் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்து கோவில்களில் இருந்து, இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சி திருவானைக்காவ
ல் நான்கு கால் மண்டபம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினரிடம் இந்து முன்னணியினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், போலீசார் அனுமதி மறுத்ததனர். இந்நிலையில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருவானைக்காவல் நான்கு கால் மண்டபம் அருகில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்ததை தொடர்ந்து திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது இந்து முன்னணியி னருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக நிலைமையை போலீசார் சமாளித்து 50க்கும் மேற்பட்டோரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Comments are closed.