கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நெய்தலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி தனலட்சுமி (வயது 28). இந்த தம்பதிக்கு யாஷிகாஸ்ரீ (3) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சாலையில் தனலட்சுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை தெரு நாய் கடித்து விட்டது. இதற்கு சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமிக்கு திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கும் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே உள்ள கீழ பஞ்சப்பூர் பகுதியில் வசிக்கும் தந்தை முருகன் வீட்டில் தங்கி இருந்த தனலட்சுமி, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்தார். இதனால் அவரது உடலில் தீப்பற்றி எரிந்தது.
அருகில் இருந்தவர்கள் இதனை பார்த்து தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1
of 927
Comments are closed, but trackbacks and pingbacks are open.